Wednesday, August 1, 2012

தரவிறக்க

பாடல், படங்கள், போட்டோக்கள் தரவிறக்க

சூப்பர் ஸ்டார் பார்த்து ரசித்த சிவாஜி!


சென்னை: 
3 டியில் தயாராகிவரும் தனது சிவாஜி - தி பாஸ் படத்தைப் பார்த்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
இந்தப் படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படத்தில், சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். வில்லனாக சுமனும் நகைச்சுவை வேடத்தில் விவேக்கும் நடித்திருந்தனர்.

உலக அளவில் இந்தியப் படங்களின் வர்த்தகப் பரிமாணத்தையே மாற்றிய பெருமை இந்தப் படத்துக்குதான் உண்டு. தமிழ்ப் படங்களையே பார்த்திராத நாடுகளிலும் கூட, ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியான சிவாஜி கலக்கியது.

இப்போது குழந்தைகளையும், பெரியவர்களையும் கவரும் வகையில், 'சிவாஜி' படத்தை `3டி' தொழில்நுட்பத்தில் தயாரித்து மீண்டும் வெளியிட, ஏவி.எம். நிறுவனம் திட்டமிட்டது.

அதன்படி, அந்த படத்தை '3டி'யில் உருவாக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெறுகிறது. பாடல் காட்சிகள் அனைத்தும் '3டி'யில் உருவாகி விட்டன. மற்ற காட்சிகளை '3டி'யில் மாற்றும் வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
'3டி' தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்ட பாடல் காட்சிகள், ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டன. அதைப்பார்த்து அவர் சின்ன குழந்தையைப் போல் உற்சாகமாக கைதட்டி, ரசித்துப் பாராட்டினார்.

பெண்களின் காமத்தை எடை போடும் குற்றாலாம்!


ஒரு காலத்தி்ல உயிர் என்ற பெயரில் ஒரு படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொழுந்தன் மீது ஆசைப்பட்ட அண்ணியின் கதை. இந்தப் படத்தை சாமி இயக்கியிருந்தார். பிறகு அவரே மறுபடியும் ஒரு வில்லங்கப் படத்தை இயக்கியிருந்தார். சிந்துசமவெளி என்று பெயரிடப்பட்ட அதில் மருமகள் மீது ஆசைப்படும் மாமனாரின் கதையை சொல்லியிருந்தார்.
இந்த வகையில் இப்போது மீண்டும் ஒரு வில்லங்கமான படமாக உருவாகி வருகிறதாம் குற்றாலம் என்ற படம். சஞ்சய் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் இது. முதலில் இதற்கு அவர்கள் வைத்த பெயர் ரோசா. பின்னர்தான் இதை குற்றாலம் என்ற பெயரில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தப் படத்தின் கதையே படு வில்லங்கமானதாக இருக்கிறதாம். அதாவது இப்படத்தில் நாயகிகளாக நடிக்கும் மீனு கார்த்திகாவும், செளகந்தியும் அக்கா, தங்கச்சியாம். படத்தின் கதைப்படி அக்காவுக்கு, தங்கச்சி புருஷனுடன் கள்ளத் தொடர்பு இருக்கிறதாம். இது அக்காவுக்கும் தெரியுமாம்.
இந்தக் காட்சியைத்தான் சமீபத்தில் குற்றாலத்தில் படமாக்கினார்களாம். காட்சியமைப்பைப் பார்த்து படக் குழுவினரை அதிர்ந்து போயுள்ளனராம். வில்லங்கமான சீனா இருக்கே என்று இயக்குநரிடம் குழுவினர் கேட்டபோது, பெண்களுக்குத்தான் ஆண்களை விட காம உணர்வு அதிகம். மேலும் இப்படிப்பட்ட காட்சிகள் வீடுகளில் இருக்க்த்தானே செய்கிறது. அதைத்தானே படம் பிடிக்கிறேன் என்றாராம்.
இந்தப் படம் என்னவெல்லாம் வில்லங்கத்தைக் கொண்டு வரப் போகிறதோ என்ற அச்சம் இப்பவே கிளம்பியிருக்கிறதாம்!

புனேயில் வெடித்தது குண்டு! இதனால் தொடர்கிறது பரபரப்பு!

புனே:
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இன்று இரவு 4 இடங்களில் அடுத்தடுத்து குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதுமில்லை.
மக்கள் அதிகம் நிறைந்திருந்த பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகளை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர். மக்களை பீதிக்குள்ளாக்கும் நோக்கிலேயே இந்த வெடிகுண்டுச் சம்பவத்தை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறது.
தேனா வங்கி அருகே ஒரு குண்டு வெடித்துள்ளது. பால் கந்தர்வ் தியேட்டர் அருகே ஒரு குண்டும், ஜங்ளி மகராஜ் சாலையில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அருகே ஒரு குண்டும், இன்னொரு இடத்திலும் குண்டுகள் வெடித்தன. நான்காவது குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
இரவு 7.30 மணி முதல் 7.45 மணிக்குள்ளாக நான்கு குண்டுகளும் வெடித்துள்ளன.இந்த குண்டுவெடிப்புகள் அனைத்துமே ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் நடந்துள்ளன. இதில் யாரும் உயிரிழக்கவில்லை. 2 பேர் காயமடைந்ததாக மகாராஷ்டிர மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு டெல்லி மற்றும் மும்பையிலிருந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகாரிகள் விரைந்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடங்களை முற்றுகையிட்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
வெடிகுண்டுச் சம்பவங்கள் குறித்து புனே போலீஸ் கமிஷனர் குலப் ராவ் பாட்டீல் கூறுகையில், இதுதீவிரவாத சம்பவம் போலத் தெரியவில்லை. உள்ளூர் விஷமிகள்தான் பீதியை ஏற்படுத்துவதற்காக இதைச் செய்துள்ளதாக சந்தேகிக்கிறோம். எந்த தீவிரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை. குப்பைத் தொட்டியிலும், சைக்கிள் கேரியரிலும் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன என்றார்.